• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

நெல்லிக்காய்


அவ்வைக்கு அதியமான் கொடுத்த நெல்லிக்கனி என்று இலக்கியத்திலும், தெய்வீக மரம் என்று புராணங்களிலும் இடம் பெற்ற நெல்லிக்காயும் அதன் மரமும் மிக்க மருத்துவ குணம் நிறைந்தது.

இதில் எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு,அதிகளவில் வைட்டமின் 'சி' உள்ளது. ஆரஞ்சு, கொய்யா, எலுமிச்சை போன்ற பழங்களை விடவும் அதிக வைட்டமின் 'சி' கொண்டது. 100 கிராம் நெல்லிக்காயில் 600 மில்லிகிராம் உள்ளது. நெல்லிக்காயில் இயற்கையாய் உள்ள 8.75 மில்லிகிராம் வைட்டமின் 'சி', செயற்கை முறையில் தயாரிக்கப்படும் 100 மில்லிகிராமிற்குச் சமம். மேலும் இதில் தாதுப்புக்களும், இரும்பு சத்தும் நிறைந்துக் காணப்படுகிறது.

இரத்தக்குழாயைச் சுத்தப்படுத்தி, இரத்த ஓட்டத்தை சீராக்கும். இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும். நெஞ்செரிச்சல், குடற்புண், வயிற்றுப்போக்கு ஆகியவற்றைக் குணப்படுத்தும். இதயநோய் மற்றும் கண்நோய் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும். முடி உதிர்வதைத் தடுக்கும்.

கிராமங்களில் கிணற்றுத் தண்ணீர் ருசியாக இல்லாவிட்டால், நெல்லி மரக்கிளையை வெட்டி கிணற்றில் போட்டுவிடுவார்கள். தண்ணீர் சுவையாக மாறிவிடும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, நெல்லிக்காயைச் சமைத்தாலும், இதிலுள்ள வைட்டமின் 'சி' யின் அளவு குறைவதில்லை.

மிகவும் துவர்ப்பாகவும், புளிப்பாகவும் இருக்கும் நெல்லிக்காயைக் கடித்து சாப்பிடுவதே ஒரு கலை. முகம் சுளிக்க சுளிக்க, பற்களால் கடித்து மென்று கொண்டே இருந்தால், அதன் துவர்ப்பும், புளிப்பும் மாறி, இனிப்புச் சுவை தோன்றும். தின்று முடித்தப்பின், தண்ணீர் குடித்தால், அடடா...... அது ஒரு இனிமையான சுவை. வாழ்க்கையின் தத்துவமும் இதுதானோ??

செய்து பாருங்கள்:

நெல்லிக்காய் உடனடி ஊறுகாய்
நெல்லிக்காய் இனிப்பு ஊறுகாய்
நெல்லிக்காய் தயிர் பச்சடி

6 கருத்துகள்:

Unknown சொன்னது…

இதுவும் செய்துப் பார்த்துச் சாப்பிட்டேன்.
நன்றாக இருந்தது. நன்றி.


கருவேப்பிலை துவையல் எப்படி செய்வது?

கமலா சொன்னது…

வருகைக்கு மிக்க நன்றி கே.ரவிஷங்கர் அவர்களே.

கறிவேப்பிலைத்துவையல் குறிப்பை இன்று பதிவிட்டுள்ளேன். செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்.

padmakirubakar சொன்னது…

nellikai oorugai kodhuthamaikku nanri.nellikai jamoon seivadhu eppadi?

கோமதி அரசு சொன்னது…

இந்த பதிவு இன்றைய வலைச்சரத்தில் வாழ்த்துக்கள்.
http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_27.html?showComment=1388105779571#c1927188437863207263

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
http://blogintamil.blogspot.com/2013/12/blog-post_27.html?showComment=1388106172450#c4072647375032658530
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Kasthuri Rengan சொன்னது…

நல்ல தகவல்
வலைச்சரம் மூலம் வந்தேன்
நன்றி

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...