- Cooking and Recipes
- Kolangal / Rangoli
- அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
எள்ளு சாதம்
தேவையானப்பொருட்கள்:
பச்சரிசி - 2 கப்
வெள்ளை எள் - 4 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணை - 4 அல்லது 5 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
செய்முறை:
சாதத்தைக் குழைய விடாமல், பொல பொல என்று வேக வைத்து எடுத்து, ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும்.
வெறும் வாணலியில் எள்ளைப் போட்டு சற்று சிவக்க வறுத்தெடுக்கவும். பின் அதே வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் கடலைப்பருப்பு, மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வறுத்தெடுத்து ஆற விடவும். பின்னர் இத்துடன் வறுத்த எள், உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக பொடி செய்யவும்.
இந்தப் பொடியை சாதத்தின் மேல் தூவி, சிறிது ந்ல்லெண்ணைச் சேர்த்து கிள்றி விடவும்.
குறிப்பு: எள் பொடியை முன்பே செய்து வைத்துக் கொண்டால், தேவை படும் பொழுது சாதத்தில் சேர்த்து கிளறிக் கொள்ளலாம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
4 கருத்துகள்:
வயிறு பசிக்குதே...
வருகைக்கு நன்றி சரவணகுமரன் அவர்களே.
உங்கள் வலைப்பக்கம் அருமை
எள்ளு பற்றிய விளம்பரம்
http://tamiladvt.blogspot.com/
நான் உங்கள் வலைபக்கத்தை இணக்கலமா ?
தஙகள் வருகைக்கு மிக்க நன்றி. என் வலைப்பதிவிற்கு இணைப்பு கொடுத்து இணைத்துக் கொள்ளுங்கள்.
கருத்துரையிடுக