• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

சொஜ்ஜி அப்பம்



தேவையானப்பொருட்கள்:

ரவா - 1 கப்
வெல்லம் - 1 கப்
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
முந்திரி பருப்பு - சிறிது (விருப்பப்பட்டால்)
மைதா - 2 கப்
உப்பு - 1/4 டீஸ்பூன்
நெய் - 2 அல்லது 3 டீஸ்பூன்
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

மைதாவை நன்றாக சலித்து விட்டு, அத்துடன் உப்பு, ஒரு டீஸ்பூன் நெய் அல்லது எண்ணை விட்டு கலந்துக் கொள்ளவும். அதில் சிறிது சிறிதாக தண்ணீரைச் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.

அடி கனமான பாத்திரத்தில் 2 கப் தண்ணீரை விட்டு கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது, ரவாவைக் கொட்டிக் கிளறவும். ரவா வெந்தவுடன் வெல்லத்தைப் பொடித்து சேர்க்கவும். தேங்காய்த்துருவலையும் சேர்த்து நன்றாகக் கிளறவும். எல்லாம் ஒன்றாகக் கலந்து கெட்டியானதும், ஏலக்காய் தூள், முந்திரி பருப்பு (ஒன்றிரண்டாக ஒடித்துப் போடவும்), ஒரு டீஸ்பூன் நெய் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி விடவும். தொட்டால் கையில் ஒட்டாமல் இருக்க வேண்டும். இந்த பதம் வந்தவுடன், இறக்கி வைத்து ஆற விடவும். ஆறியவுடன், சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

மைதா மாவை எலுமிச்சம் பழ அளவிற்கு எடுத்து, பூரி போல் உருட்டவும். அதன் மேல் ரவா பூரண உருண்டையை வைத்து, பூரியின் மூலையை ஒன்றாகச் சேர்த்து மூடவும். பின்னர் இலேசாக அதை விரல்களால் அழுத்தி அதிரசம் போல் வட்டமாக தட்டவும்.

ஒரு வாணலியில் எண்ணையை ஊற்றி சூடாக்கவும். எண்ணை காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து, செய்து வைத்துள்ள அப்பத்தைப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

கவனிக்க: மாவில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பிசைந்தால் அப்பம் கருஞ்சிவப்பாக இருக்கும். வெல்லத்திற்குப் பதில் சர்க்கரை சேர்த்தும் செய்யலாம்.

பண்டிகை நாட்களில் மேற்கண்டவாறு செய்ய வேண்டும். பண்டிகை அல்லாமல், சாதாரண நாட்களில் செய்வதென்றால், மீந்து போன கேசரியை வைத்தும் இதை செய்யலாம்.

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

செய்தி பார்க்க சொல்கிறேன்... தகவலுக்கு நன்றி சகோதரி!
நம்ம தளத்தில்:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"

சென்னை பித்தன் சொன்னது…

இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.

கமலா சொன்னது…

மிக்க நன்றி சென்னை பித்தன் அவர்களே.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...